ஜூலை 2 பாராளுமன்றம் விசேடமாக கூடுகின்றது

150 0

பிரதமர் தினேஷ் குணவர்தனவின்  வேண்டுகோளுக்கிணங்க பாராளுமன்றத்தின் 16ஆவது நிலையியற் கட்டளையின் பிரகாரம்   ஜூலை  2ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை  9.30 மணிக்கு பாராளுமன்றத்தில் விசேட கூட்டமொன்றுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருப்பதால், அக்கூட்டத்தில் பங்குபற்றுமாறு சகல   பாராளுமன்ற உறுப்பினர்களையும் வேண்டிக் கொள்வதாக சபாநாயகர்  மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

கடந்த 20 ஆம் திகதி பாராளுமன்றம் அமர்வு முடிந்து சபை ஒத்திவைக்கப்பட்டபோது எதிர்வரும் 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு பாராளுமனம் மீண்டு கூடுமென அறிவிக்கப்பட்ட நிலையிலேயே தற்போது பிரதமர் தினேஷ் குணவர்தனவின்  வேண்டுகோளுக்கிணங்க பாராளுமன்றத்தின் 16ஆவது நிலையியற் கட்டளையின் பிரகாரம் ஜூலை  2ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடுகிறது.