மதுபான விற்பனை நிலைய உரிமம் வழங்குவதனை நிறுத்துமாறு மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுபான விற்பனை நிலையங்களை திறப்பதற்கான உரிமத்தை வழங்குவதனால் சமூக சீரழிவுகள் ஏற்படக் கூடும் என அவர்கள் தெரிவித்துள்னர்.
சுயநலவாத பொருளாதார மற்றும் அரசியல் நோக்கங்களுக்காக அரசாங்கம் மதுபான விற்பனை நிலைய உரிமங்களை வழங்குவதனை மாநாயக்க தேரர்கள் என்ற ரீதியில் எந்த வகையிலும் அனுமதிக்கப் போவதில்லை என மேலும் தெரிவித்துள்ளனர்.

