முச்சக்கர வண்டி சாரதியின் தொலைபேசி தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில் அனுமதி !

126 0

மது போதையில் முச்சக்கர வண்டியைச் செலுத்திச் சென்ற சாரதி ஒருவரை கைதுசெய்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற பொலிஸ் அதிகாரியின் தலையில் கைத்தொலைபேசியால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தாக்குதலை முச்சக்கரவண்டி சாரதி மேற்கொண்டுள்ளதாகவும் தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று புதன்கிழமை (18) போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்தபோது, மதவாச்சி பொலிஸார் மதவாச்சி வைத்தியசாலைக்கு முன்பாக முச்சக்கரவண்டியை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

முச்சக்கரவண்டியின் சாரதி மதுபோதையில் இருந்தமை தெரிய வந்ததையடுத்து, சந்தேகத்தின்பேரில் அவர் கைது செய்யப்பட்டு, சுவாசக் குழாய் பரிசோதனைக்காக மதவாச்சி பொலிஸ் நிலைய வாகனப் போக்குவரத்துப்பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

சுவாசக் குழாய் பரிசோதனைக்கு எதிர்ப்புத் தெரிவித்த சந்தேக நபர், கையிலிருந்த கையடக்கத் தொலைபேசியினால் பொலிஸ் உத்தியோகத்தரின் தலையில் தாக்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.