கருத்துசுதந்திரத்தை ஒடுக்குவதற்காக சட்டங்களை ஆயுதமாக்கும் கலாச்சாரத்தை இலங்கை அதிகாரிகள் நிறுத்தவேண்டும்

141 0

கருத்துசுதந்திரத்தை ஒடுக்குவதற்காக சட்டங்களை ஆயுதமாக்கும் கலாச்சாரத்தை  இலங்கை அதிகாரிகள் நிறுத்தவேண்டும் என சர்வதேச  மன்னிப்புச்சபையின் தென்னாசிய பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசிய பிரிவு  மேலும் தெரிவித்துள்ளதாவது

நகைச்சுவை நிகழ்ச்சியின் போது வெளியிட்ட கருத்துக்கள் பௌத்தமதத்தை அவமதிக்கும் விதத்தில் காணப்பட்டன என்ற குற்றச்சாட்டின் கீழ் நடாஷா எதிரிசூரியவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கிலிருந்து அவரை விடுதலை செய்வது என்ற கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் முடிவை நாங்கள் வரவேற்கின்றோம்.

கருத்துசுதந்திரத்திற்கான உரிமையானது ஆழமாக புண்படுத்தக்கூடிய கருத்துக்கள் உட்பட அனைத்து கருத்துக்களுக்கும் பொருந்தும் என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகின்றோம்.

வெறுப்பைபரப்புரை செய்வதற்கு எதிரான போராட்டத்தி;ற்காக உருவாக்கப்படும் அனைத்து கொள்கைகளும் நடைமுறைகளும் இறுக்கமான முறையில் உருவாக்கப்பட்டு பின்பற்றப்படுவதை இலங்கை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும் இதன் மூலம் நியாயமற்ற கட்டுப்பாடுகள் கருத்துசுதந்திரத்தை முடக்கும் நடவடிக்கைகளை தவிர்க்கலாம்.

கருத்துசுதந்திரத்தை ஒடுக்குவதற்காக சட்டங்களை ஆயுதமாக்கும் கலாச்சாரத்தை  இலங்கை அதிகாரிகள் நிறுத்தவேண்டும் .