இலக்கம் 104, டென்சில் கொப்பேகடுவ மாவத்தை என்ற முகவரியில் அமைந்துள்ள மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் வளாகத்தில் இந்த நெய் சோறு தானம் இன்று நண்பகல் 12.00 மணி முதல் வழங்கப்படவுள்ளது.
மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் வேணுர பெர்னாண்டோ மற்றும் பணிப்பாளர் நாயகம் பி.பி. ஹேமந்த ஜயசிங்க தலைமையில் ஊழியர்களின் நிதி பங்களிப்புடன் 400 கிலோ கிராம் நெய் சோறு சுமார் 3,200 பேருக்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தான நிகழ்வில் பங்கு கொள்ளுமாறு பொது மக்களுக்கு மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அழைப்பு விடுத்துள்ளது.

