இந்த விபத்து இன்று (19) புதன்கிழமை காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கட்டுநாயக்கவிலிருந்து நொச்சியாகம நோக்கிப் பயணித்த சிறிய வேன் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மின் கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது வேனில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளனர்.
வேன் சாரதி உறங்கியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




