கொழும்பில் உள்ள முன்னணிப் பாடசாலை ஒன்றில் நடைபெற்ற நகைச்சுவை நிகழ்ச்சியில், பௌத்த மதத்தை அவமதித்ததாகக் கூறி கடந்த வருடம் மே 28 ஆம் திகதி கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து நடாஷா குற்றப் புலனாய்வு திணைக்கள (CID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் SL-Vlog உரிமையாளர் புருனோ திவாகர மே 31 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து குறித்த இருவருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த வருடம் ஜூன் 21 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், நடாஷா கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த பின்னர் ஜூலை 05 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார்.

