“என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா” என்ற பெயரில் நிறுவனமொன்றையும் நிறுவி கைத்தொழில் துறையை மேம்படுத்த திட்டம்

102 0

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா”  என்ற பெயரில் புதிய நிறுவனமொன்றையும்  நிறுவுவதன் மூலம் நாட்டின் கைத்தொழில் துறையை மேம்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

2024 சர்வதேச கைத்தொழில் கண்காட்சியை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் தெரிவித்த ஜனாதிபதி,

இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் அடுத்த சில வாரங்களில் உடன்பாடு எட்ட எதிர்பார்ப்பதாகவும் அதன் பின்னர் போட்டித்தன்மையுள்ள டிஜிட்டல்மயமான  பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக புதிய வர்த்தக வங்கியொன்றையும் பொருளாதார ஆணைக்குழுவொன்றையும்  “என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா”  என்ற பெயரில் புதிய நிறுவனமொன்றையும்  நிறுவுவதன் மூலம் நாட்டின் கைத்தொழில் துறையை மேம்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்றார்.