லொறி – கார் விபத்தில் தாய் பலி : தந்தை, மகள் படுகாயம்

112 0

வாரியப்பொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருணாகல் – புத்தளம் வீதியில் மஹகெலிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தாய் உயிரிழந்துள்ளதுடன் தந்தை மற்றும் மகள் படுகாயமடைந்துள்ளதாக வாரியப்பொல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (17) திங்கட்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

புத்தளத்திலிருந்து குருணாகல் நோக்கிப் பயணித்த லொறி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்த்திசையில் பயணித்த கார் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது காரில் பயணித்த தாய், தந்தை மற்றும் மகள் காயமடைந்துள்ள நிலையில் வாரியப்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தாய் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குருணாகல், மாஸ்பொத்த பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய தாயொருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரது சடலம் வாரியப்பொல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது லொறியின் சாரதியும் காயமடைந்துள்ள நிலையில் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாரியப்பொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.