இந்திய மீனவர்களின் அத்துமீறல் : இந்திய துணைத் தூதரை சந்தித்தனர் வடக்கு மீனவர்கள்

121 0

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதுவர் சாய் முரளியுடன் இந்திய இழுவை மடி படகுகள் அத்துமீறல் தொடர்பாக கடற்றொழிலாளர்கள் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர்.

இது தொடர்பில் யாழ். இந்திய துணைத் தூதரகம் வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில், இன்று யாழ் மாவட்ட மீனவர் சம்மேளனம், யாழ் மாவட்ட கிராமிய மீனவர் கூட்டமைப்பு மற்றும் வடகிழக்கு மீனவர் சங்கம் ஆகியவற்றுடன் பயனுள்ள கலந்துரையாடல் ஒன்றை நடத்தினோம் எனப் பதிவிடப்பட்டது.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறும் இந்திய இழுவைப் படகைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி இந்திய துணைத் தூதரகம் முன்பாக கடற்றொழிலாளர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்து மகஜரொன்றை கையளித்தனர்.