இ.போ.ச பஸ் – கார் மோதி விபத்து ; ஒருவர் காயம்

105 0

பாதுக்கை,லியன்வல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (16) ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று கார் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது காரின் சாரதி காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் காரின் முற்பகுதி முற்றிலும் சேதமடைந்துள்ளது.