ஹட்டன் நகரில் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

114 0

அரசாங்க வேலைகளை வழங்குமாறு கோரி பெருந்தோட்ட வேலையற்ற பட்டதாரிகளால் இன்று (16) ஞாயிற்றுக்கிழமை ஹட்டன் நகரில் கவனயீர்ப்பு பேரணியும் போராட்டமும் இடம்பெற்றது.

ஹட்டன் நகர மத்தியில் இருந்து ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டப் பேரணி ஹட்டன் மல்லியப்பு சந்தி வரை சென்று அங்கு போராட்டம் இடம்பெற்றது.

தற்போது தோட்டப் பகுதியில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளில் அதிகமான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகவும், அந்த ஆசிரியர் பற்றாக்குறையை நிரப்புவதற்கு வேலையற்றிருக்கும் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் பதவிகளை வழங்க முடியும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவிக்கின்றனர்.

மேலும், பல்வேறு அரசுப் பணிகள், பதவிகளை பட்டதாரிகளாக உள்ள தமக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் இதன்போது போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.