அகுனுகொலபலஸ்ஸ சிறைச்சாலையின் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மொரட்டுவை, மொரட்டு வெல்ல, மாதங்கஹவத்தையிலுள்ள வீடொன்றில் வைத்தே சந்தேக நபர் 90 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் அஹங்கம தித்தகல்ல பகுதியில் வசிக்கும் 26 வயதுடையவர் ஆவார்.
இவர் மொரட்டுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இது தொடர்பில் மொரட்டுவ தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

