கொழும்பு கோட்டையிலிருந்து நானுஓயா நோக்கி பயணித்த ரயில் நேற்று சனிக்கிழமை (15) இரவு தலவாக்கலை மற்றும் வட்டகொட புகையிரத நிலையங்களுக்கிடையிலான பாலத்தில் தடம் புரண்டுள்ளது.
இந்நிலையில், இந்த ரயிலில் பயணித்த பயணிகள் பேருந்துகளில் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தடம் புரண்ட ரயிலை சீர்ப்படுத்தும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்றுவருகிறது.
இதனால் மலையகத்துக்கான ரயில் சேவை தடைப்பட்டுள்ளதாக ரயில் நிலைய கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவிக்கிறது.




