காங்கோவில் படகு கவிழ்ந்து விபத்து: 80க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

118 0

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் படகு கவிழ்ந்த விபத்தில் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

காங்கோ நாட்டின் மாய் – டோம்பே மாகாணத்தில் உள்ள குவா நதியில் இந்த விபத்து நடந்துள்ளது. இதில் படகில் பயணம் செய்த 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு குடியரசுத் தலைவர் பெலிக்ஸ் ஷிசெகெடி தெரிவித்தார்.இது தொடர்பாக குடியரசுத் தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தின் உண்மையான காரணங்களை விசாரிக்கவும்,எதிர்காலத்தில் இதுபோன்ற பேரழிவுகள் மீண்டும் நிகழாமல் தடுக்கவும் குடியரசுத் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.

காங்கோ நாட்டில் இதுபோன்ற படகு விபத்துகள் அடிக்கடி நிகழ்வது தொடர்கதை ஆகி வருகிறது.