அனலைதீவைச் சேர்ந்த திருச்செல்வம் மைக்கல் பெர்னாண்டோ மற்றும் நாகலிங்கம் விஜயகுமார் ஆகிய இருவருமே படகு இயந்திரம் பழுதாகி தமிழகத்தின் நாகப்பட்டினம் பகுதியில் கரையொதுங்கியுள்ளனர்.
வேதாரண்யம் காவல் சரகம், ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்திற்கு கிழக்கே சுமார் 2 நாட்டிகல் மைல் தொலைவில், வங்காள விரிகுடா கடலில், இரு மீனவர்களும் கரையொதுங்கியுள்ளனர்.
மீனவர்கள் இருவரையும், நாகப்பட்டினம் கடலோர பாதுகாப்பு குழும காவல் ஆய்வாளர் ரமேஷ் (பொறுப்பு – வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழுமம்) விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
அனலைதீவில் இருந்து கடந்த திங்கட்கிழமை (10) மாலை 5 மணியளவில் கடற்தொழிலுக்கு சென்ற இருவரைக் காணவில்லை என குடும்பத்தினர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

