யாழ். ஆயர் இல்லத்துக்குச் சஜித் விஜயம்!

120 0

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ  10 ஆம் திகதி  யாழ். ஆயர் இல்லத்துக்கு விஜயம் மேற்கொண்டார்.

இந்தச் சந்திப்பில் யாழ். மறை மாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அடிகளார் கலந்துகொண்டிருந்தார்.

இவருடன் மறைக்கோட்ட முதல்வர்கள், அருட்தந்தையர்கள் ஆகியோரும் எதிர்க்கட்சித் தலைவருடன் கலந்துரையாடினர்.

அரசமைப்பின் 13 ஆவது திருத்தம், காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, தமிழ்ப் பொது வேட்பாளர் தெரிவு போன்ற அருட்தந்தையர்களின் வினாக்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதில் வழங்கினார்.