சாமானியர்கள் சூப்பர் ஹீரோக்களான தருணம்

116 0

 பூமியை சுனாமி, புயல், எரிமலை வெடிப்பு என பல்வேறு இயற்கை சீற்றங்கள் அவ்வப்போது தாக்கி வருகிறது. இயற்கை அன்னை தனது கோர முகத்தை பல்வேறு வகைகளில் காட்டினாலும் இறுதியில் மனிதநேயம் வெல்லும் என்பது நீதி. இந்த கருத்தை ஒப்புக்கொள்ளும்படியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தென்கிழக்கு நாடு ஒன்றில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் கனமழையுடன் கூடிய கடுமையான புயல் ஒன்று சுழன்று அடிக்கிறது. புயலில் இருந்து தப்பிப் பிழைக்க அங்கே உள்ள கடை ஒன்றில் பாதுகாப்புக்காக சிலர் ஒதுங்கி நிற்கிறார்கள்.அப்போது தெருவோரத்தில் சிறுமி உள்பட 2 பேர் ஆபத்தான நிலையில் சிக்கி தவிக்க, உயிருக்கு அஞ்சாமல் அவர்களை மீட்க 4 வாலிபர்கள் விரைகிறார்கள்.

பின்னர் அவர்களை மீட்பதுடன் அந்த வீடியோ காட்சி முடிகிறது. பிரதிபலன் பார்க்காமல் கனநேரத்தில் அந்த இளைஞர்கள் அஞ்சாநெஞ்சர்களாக செயல்பட்டு புயலில் சிக்கியவர்களை மீட்பது தொடர்பான வீடியோவை, ‘சாமானியர்கள் சூப்பர் ஹீரோக்களான தருணம்’ என்று கருத்து தெரிவித்து இணையவாசிகள் பரப்பி வருகிறார்கள். View this post on Instagram A post shared by Good News Movement (@goodnews_movement)”,