ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமையை வழங்க வேண்டும்

117 0

உலகில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை இருக்கும்  இந்தியாவுக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்புரிமையை வழங்க வேண்டும். அது தொடர்பில் இந்த சபையில் பிரேரணை ஒன்றை முன்வைக்கிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன் கிழமை (05) விசேட கூற்றொன்றை முன்வைத்து, இந்திய தேர்தலில் வெற்றிபெற்ற பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்.

உலகில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை இருக்கும்  இந்தியாவுக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்புரிமையை வழங்குவது தற்போது மிகவும் யோக்கியமானதாகும்.

விசேடமாக உலகளாவிய அதிகார கேந்திர நிலையங்களை பார்க்கும் போது உண்மையாகவே இந்தியாவுக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்புரிமையை வழங்குவது நிச்சயமாக செயற்படுத்தக்கூடியதாகும். அதனால் இந்தியாவுக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிர்ந்தர உறுப்புரிமையை வழங்கவேண்டும் என்ற பிரேரணை இந்த சபைக்கு முன்வைக்கிறேன். பாராளுமன்றத்தில் இருக்கும் 225பேரும் இதனை அனுமதிக்கும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது என்றார்.