சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 6 ஆயிரம் சிகரெட்டுகளுடன் சந்தேக நபரொருவர் வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொலன்னாவை பிரதேசத்தில் நேற்று (4) பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கொலன்னாவை பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடையவர் ஆவார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக வெல்லம்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

