இனிப்பு பண்டங்களை விற்பனை செய்யும் போர்வையில் கேரள கஞ்சா போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, சந்தேக நபரிடத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இவருக்குப் போதைப்பொருள் வழங்கியதாக கூறப்படும் மதுரங்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய சந்தேக நபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணையில் சந்தேக நபர்களிடமிருந்து 750 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

