இத்தாலியில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி ; சந்தேக நபர் கைது

137 0

இத்தாலியில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபரொருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் கடந்த 1 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி, பேராதனை பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் இத்தாலியில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி நபரொருவரிடமிருந்து 1,250,000 ரூபா பணம் பெற்று மோசடி செய்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு முறைப்பாடு ஒன்று கிடைக்கப் பெற்றுள்ளது.

இதனையடுத்து, சந்தேக நபர் கைது செய்யப்பட்டு கண்டி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவரை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.