7 வயதுடைய சிறுவனை தலைகீழாக கட்டிதொங்க விட்ட தாய் கைது

215 0
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சாதாட் கிராமத்தில் தனது மகனை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு தடியால் தாக்கியதாக குறித்த பெண்ணின் கணவரால் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் முதல் கணவரால் கைவிடப்பட்ட நிலையில் புத்தளம் பகுதியில் உள்ள மேலும் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாகவும் குறித்த இரண்டாவது கணவருக்கும் ஒரு பிள்ளை உள்ளதாகவும் குறித்த கணவரும் குறித்த பெண்ணை விட்டு சென்றுள்ளார். இந்நிலையில்  குறித்த இரண்டாவது கணவரின் பிள்ளை குறித்த பெண்ணினால் தாக்கப்படுவதாக அயலவர்களினால் குறித்த நபருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து குறித்த பெண்ணின் ஊரான ஏறாவூர் சாதாட்ற்கு வந்த இரண்டாவது கணவர் தனது பிள்ளையை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு குறித்த பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் பெண்ணின் கையடக்கத் தொலைபேசியை எடுத்து பார்த்த போது தனது பிள்ளையை குறித்த பெண் தாக்கியது காணொளியாக எடுக்கப்பட்டுள்ளதை அவதானித்துள்ளார்.

உடனடியாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்கு விரைந்து பொலிஸாரிடம் காணொளியை காண்பித்துள்ளார்.  இதன்போது பொலிஸார் அதிர்ச்சியடைந்த நிலையில் குறித்த காணொளிக்கு அமைய குறித்த பெண்ணை நேற்று கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.