சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து இன்று செவ்வாய்க்கிழமை (28 ) பொதுஜன பெரமுனவின் காரியாலயத்திற்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதன் காரணமாக பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
இந்த எதிர்ப்பு நடவடிக்கையை பொலிஸார் தடுத்த போது பொலிஸாருக்கும் எதிர்ப்பில் ஈடுபட்டவர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறித்த வீதியூடாக செல்ல முற்பட்ட போது எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் தடுக்க முற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

