மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சௌத்பார் கடற்கரை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (26) காலை ஆட்கள் இல்லாத நிலையில் மீன்பிடி படகொன்று கரை ஒதுங்கியுள்ளது.
இந்த படகில் வெளி இணைப்பு இயந்திரம் பொருத்தப்பட்ட நிலையில், படகினுள் மீன்பிடி வலைகள் மற்றும் மீன்கள் காணப்படுகின்றன.
சௌத்பார் கடற்படையினர் இந்த படகை மீட்டுள்ளதோடு, இது தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த படகு தொழிலுக்குச் சென்ற மீனவர்களுடையதா அல்லது வேறு மாவட்டங்களில் இருந்து காற்றில் அடித்துவரப்பட்டதா என கடற்படையினர் விசாரித்து வருகின்றனர்.

