திருகோணமலையில் கடற்பரப்பில் கடற்றொழிலாளர்கள் இருவர் மாயம்

25 0

திருகோணமலை மாவட்டத்தின் சல்லி கடல் பகுதியில் இருந்து கடலுக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் இருவர் மாயமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 20.05.2024 சல்லி பிரதேசத்தில் இருந்து காலை 10மணியளவில் கடலுக்கு சென்ற கடற்றொழிலாளர்களே இவ்வாறு காணாமல்போயுள்ளனர்.

குறித்த கடற்றொழிலாளர்கள் இருவரும், வட்டாரம்_ 2 சல்லி பிரதேசத்தை சேர்ந்த குட்டிராசா சசிக்குமார்(45 ) மற்றும் முருகையா சுஜந்தன் வயது( 22) என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் கடற்றொழிலாளர்கள் இருவர் தொடர்பான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனனர்.குறித்த இருவரையும் தேடி சல்லி பிரதேசத்தைச்சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் சென்றுள்ள நிலையில் இது தொடர்பில் கடற்படைக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக மீனவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.