யாழில். கடற்தொழிலுக்கு சென்றவர் கடலில் மயங்கி விழுந்து உயிரிழப்பு

16 0

யாழ்ப்பாணத்தில் கடற்தொழிலுக்கு சென்ற தொழிலாளி ஒருவர் நேற்று  புதன்கிழமை (22) கடலில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

அல்லைப்பிட்டி 3ஆம் வட்டாரத்தை சேர்ந்த 58 வயதுடைய அந்தோணிப்பிள்ளை றோமன் மெய்ன்ரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

கட்டுமரமொன்றில் மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் சென்ற வேளை , கட்டுமரத்தில் இருந்து தவறி கடலினுள் விழுந்து உயிரிழந்துள்ளார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.