300,000 வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் துண்டிப்பு

24 0

சீரற்ற வானிலை காரணமாக கடந்த 3 நாட்களில் 300,000க்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தனது உத்தியோகபூர்வ X கணக்கில் குறிப்பொன்றையிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.

36,900 மின்சார துண்டிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

மின்விநியோகத்தை சீரமைக்க மேலதிக ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மின்சாரம் துண்டிக்கப்பட்ட இடங்களுக்கு அடுத்த 24 மணித்தியாலங்களில் மின்சாரம் விநியோகிக்கப்படும் எனவும் அமைச்சர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மின்சார பாவனையாளர்கள் 1987 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பு அல்லது குறுஞ்செய்தி அனுப்பி மின்வெட்டு தொடர்பில் அறிவிக்க முடியும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது அறிவிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.