தமிழ், சிங்கள மக்களிடையே இன நல்லிணக்கம் ஏற்பட புத்தாண்டு வழிசமைத்துக்கொடுக்கட்டும் – சம்பந்தன்!

241 0

தமிழ், சிங்கள இனங்களுக்கிடையே இன நல்லிணக்கம் ஏற்பட இந்தப் புத்தாண் வழிசமைக்கட்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவரினால் வெளியிடப்பட்ட வாழ்த்துச் செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவரது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது,இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் மட்டுமன்றி, பகுதிகளில் வாழும் எம் தமிழ் உறவுகளுக்கும் எம்மோடு இணைந்து புத்தாண்டினை கொண்டாடும் சிங்கள சகோதரர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

தமிழ் மக்களை தற்போது அனுபவித்து வரும் துன்பங்கள், ஏமாற்றங்கள், ஏக்கங்கள் மற்றும் ஒதுக்கல்களில் இருந்து மீண்டு அவர்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் வகையில் அரசாங்கம் செயற்படவேண்டும் என்ற எமது கோரிக்கையையும் இதில் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இந்த நாட்டின் பெரும்பான்மை இனத்தவரான சிங்கள மக்களும் சிறுபான்மை இனத்தவரான தமிழர்களுக்கும் பொதுவான சித்திரை புத்தாண்டு கொண்டாடுவதை போல அனைத்து விடயங்களிலும் நல்லுறவுடன் செயற்படவேண்டும்.அந்த வகையில், இனங்களுக்கிடையில், ஒற்றுமை, நல்லுறவு, புரிந்துணர்வு ஏற்பட்டு சாந்தி, சமாதானம் மேலோங்கி இந்த நாட்டு அமைதி பூங்கவாக மிளிர,

பிறக்கும் ஏவிளம்பி புத்தாண்டில் நல்லவெல்லாம் நடந்தேறிட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதுடன், அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.