தமிழின அழிப்பு நினைவு நாள் மே18 நினைவெழுச்சி நாள் பெல்சியம்.

138 0

2009 இல் முள்ளிவாய்க்கால் வரை,தாயகத்தில் சிங்கள இன வெறி அரசால் திட்டமிட்ட முறையில் தமிழ் மக்கள் மீது இனவழிப்புப் போரைக் கட்டவிழ்த்து விட்டது . பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள்
படுகொலை செய்யப்பட்டும், எறிகணை மற்றும் விமான குண்டுவீச்சக்களாலும், கொத்து குண்டுகளாலும் உடல்கள் அங்கவீனம் ஆக்கப்பட்டும் , விசாரணை என்ற பெயரில் வலிந்து கைது செய்யப்பட்டு காணமல் ஆக்கப்பட்டும் இருந்தனர் .

15 ஆண்டுகள் ஆகியும் இன்னும் தாயகத்தில் இனவழிப்பு தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது. வடகிழக்கு தாயக பூமியில் அத்துமீறி சிங்கள குடியேற்றங்கள் உருவாக்குவதும் , புதிது புதிதாக சிங்களபௌத்த விகாரைகள் நிர்மானிப்பதும், தொல்பொருள் ஆராட்சி என்ற பெயரில் எங்களுடைய வளங்கள் சுறண்டப்படுவதும் ,கைதுகளும்,காணாமல் ஆக்கப்படுவதும் நடந்த வண்ணமே இருக்கின்றது.

இவ்வாண்டு வழமைக்கு மாறாக தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் பெருந்திரளான மக்கள் கூடி முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்த நாளை உணர்வு பூர்வமாக நினைவு கூறப்பட்டவேளையில் பெல்சியத்திலும் பல்லின மக்கள் செறிந்து வாழ்கின்ற அன்வேர்ப்பன் மானிலத்தில் சிறப்பான முறையில் நினைவு கூறப்பட்டது.முள்ளிவாய்க்கால் இனவழிப்பைச் சித்தரிக்கின்ற கண்காட்சியும், இனவழிப்பு செய்வர்களில் முக்கிய நபரான கோட்டபாய இராசபக்சவின் உருவப்பொம்மையும் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டதோடு, துண்டு பிரசுரங்களும் ,இனவழிப்பு வாசகங்கள் ஒட்டப்பட்ட குடிநீர் போத்தல்களும் பல்லின மக்களிற்கு வழங்கப்பட்டு ,முதன்மை நிகழ்வுகளுடன் முள்ளிவாய்காலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளிற்கு வணக்கம் செலுத்தப்பட்டது.அத்தோடு,எழிச்சி நிகழ்வுகளும் ,முள்ளிவாய்க்கால் மண்ணில் நடைபெற்ற இனவழிப்பின் வடுக்களை அடுத்த தலைமுறையினருக்கு கடத்தும் முகமாக, தமிழர் கலைபண்பாட்டுகழகம்-அனைத்துலக தொடர்பகத்தினால் நடத்தப்பட்ட தமிழின அழிப்பின் வெளிப்பாட்டுக் கலைதிறன் போட்டிகளில் பங்கு பற்றி தேர்ச்சி பெற்றவர்களிற்குச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது . இறுதியாக முள்ளிவாய்க்காளில் இறுதி போரில் மக்களின் அவலத்தை நினைவு படுத்துகின்ற கஞ்சி வழங்கப்பட்டு நிறைவு பெற்றது.