ஜேர்மனியில் பாலஸ்தீனியர் ஒருவருக்கு சிறை

27 0

ஜேர்மனியில், கடந்த ஆண்டு பாலஸ்தீனியர் ஒருவர் ரயிலில் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில், இரண்டு பதின்மவயதினர் கொல்லப்பட்டார்கள், பலர் காயமடைந்தார்கள். அந்த வழக்கில் தற்போது அந்த நபருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு, அதாவது, 2023ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 25ஆம் திகதி, ஹாம்பர்கிலிருந்து Kiel நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஒரு ரயிலில், திடீரென ஒருவர் பயணிகளை கத்தியால் தாக்கத் துவங்கினார்.

தாக்குதலில், 17 வயது இளம்பெண் ஒருவரும், அவரது காதலரான 19 வயது இளைஞர் ஒருவரும் பலியானார்கள், நான்கு பேர் காயமடைந்தார்கள். சக பயணிகள் அவர் மீது பாய்ந்து அவரை மடக்கிப் பிடித்துவைத்துக்கொள்ள, உடனடியாக ரயில் நிறுத்தப்பட, Brokstedt என்னுமிடத்தில் ரயிலில் ஏறிய பொலிசார் தாக்குதல்தாரியைக் கைது செய்தார்கள்.

தாக்குதல் நடத்தி இரண்டு உயிர்கள் பலியாக காரணமாக இருந்த அந்த நபர் ஒரு பாலஸ்தீனியர். 2014ஆம் ஆண்டு ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்த அவரது பெயர், இப்ராஹிம் ( Ibrahim A, 34).

ஜேர்மனியில் குடியிருப்பு அனுமதி பெற முயற்சி செய்துகொண்டிருந்த இப்ராஹிம், புலம்பெயர்தல் அலுவலர்களை சந்திக்க முயன்று, அப்பாயிண்ட்மென்ட் கிடைக்காத விரக்தியில் பயணித்துகொண்டிருந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்திருந்தார்கள்.

தண்டனை

இரண்டு கொலைக்குற்றச்சாட்டுகள், நான்கு கொலைமுயற்சிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த இப்ராஹிமுக்கு இன்று Itzehoe நகர நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

ஜேர்மனியில் பாலஸ்தீனியர் ஒருவருக்கு சிறை: விவரம் செய்திக்குள் | A Palestinian Jailed In Germany

 

வழக்கமாக ஜேர்மனியில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள், 15 ஆண்டுகளுக்குப் பின் தானாகவே சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுவிடுவார்கள். ஆனால், இப்ராஹிமுடைய குற்றத்தின் தீவிரம் கருதி, அவர் 15 ஆண்டுகளுக்குப் பின்னும் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவது கடினமே என கருதப்படுகிறது.