இலங்கை உயர் நீதிமன்ற அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி

13 0

இலங்கை உயர் நீதிமன்றப் பதிவாளர் அதிகாரிகள் 15 பேர் கொண்ட குழுவொன்று மே 9 முதல் 13 ஆம் திகதி வரை இந்திய உயர் நீதிமன்றத்தில் நான்கு நாள் பயிற்சித் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

இந்த பயிற்சி திட்டத்தின் போது,  இணைய – நீதிமன்றத் திட்டம், நூலகம் மற்றும் நீதிமன்ற செயல்முறைகளான தாக்கல் செய்தல், பட்டியலிடல், ஆய்வு செய்தல், ஸ்கேன் செய்தல் மற்றும் பதிவுகளை பேணல் உள்ளிட்ட இந்திய உயர் நீதிமன்றத்தின்  தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் மாற்றம் குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட வெளிப்படைத்தன்மை, செயல்திறன் மற்றும் அணுகல்தன்மை கொண்ட அமைப்புகளின் நுணுக்கத்தை  இந்திய உயர் நீதிமன்ற சிரேஷ்ட பதிவாளர்கள் விளக்கியுள்ளனர்.

இந்த பயிற்சி திட்டம் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவு மற்றும் நீதித்துறை சிறப்பு மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்கான பரஸ்பர அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும்.

இந்திய தலைமை நீதிபதி தனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட்டின் வழிகாட்டுதலின் கீழ், அறிவை ஊக்குவித்தல் மற்றும் சர்வதேச நீதித்துறை நிறுவனங்களுடன் ஒத்துழைப்பை வளர்த்தல் என்ற அடிப்படையில் இந்திய உயர் நீதிமன்ற பயிற்சி மையம் இந்த பயிற்சியை நடாத்தியுள்ளது.