பலாலி விமான நிலைய விஸ்தரிப்பில் சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு விரைவில் நஸ்ட ஈடு – யாழ் அரசஅதிபர்

232 0
பலாலி விமானநிலைய விஸ்தரிப்புக்காக  சுவீகரிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்களுக்கு விரைவில் நஸ்ட ஈடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் யாழ் மாவட்ட செயலகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ‘
மேற்குறித்த விடயம் தொடர்பாக முக்கிய அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் யாழ் மாவட்ட அரச அதிபர் அலுவலகத்தில்  நடைபெற்றது.
பலாலி விமானநிலைய விஸ்தரிப்புக்காக கடந்த 1950 ஆம் ஆண்டு மற்றும் 1983 ஆம் ஆண்டு காணி சுவீகரிப்பு நடவடிக்கை நடைபெற்றது. 1950 ஆம் ஆண்டு 340 ஏக்கரும்,  1983 ஆம் ஆண்டு 660 ஏக்கர் நிலப்பரப்பும் சுவீகரிக்கப்பட்டது.
ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்களுக்குரிய இக்காணிகளுக்கான நஸ்டஈடு இத்தனை வருட காலங்கள் ஆகியும் வழங்கப்படவில்லை. குறித்த நஸ்டயீட்டை விரைவாக வழங்குவது தொடர்பாக நேற்றைய தினம் கலந்துரையாடப்பட்டது.
குறித்த நஸ்டஈட்டின் பெறுமதி தற்போதைய காணிகளுக்குரிய பெறுமதியின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டு  வழங்க வேண்டும் எனவும் குறித்த காணி உரிமையாளர்கள் காணிகளை அடையளம் காண்பிப்தற்கான நடவடிக்கைகளை எந்த முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கலந்துரையாடப்பட்டது.
மேற் குறித்த கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை  காணி அமைச்சுக்கு தெரிவித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை விரைவில் மேற்கொண்டு காணி உரிமையாளர்களுக்கு விரைவில் நஸ்டயீடு  வழங்கப்படவுள்ளது.