குளியாபிட்டிய இளைஞனின் சடலம் தொடர்பில் விசாரணை!

21 0

குளியாபிட்டிய இளைஞனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவர் கொலை செய்யப்பட்டதற்கான சரியான காரணம் இதுவரை வெளிவரவில்லை என சிலாபம்  பொது வைத்தியசாலையின் நிபுணத்துவ சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார் .

சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்காமல் மேலதிக விசாரணைகளுக்காக வைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை (07) இந்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .