இலங்கை பிரஜை அல்லாதவர்கள் அரசியல் கட்சியொன்றை பதிவு செய்யமுடியுமா?

37 0

இலங்கையின் பிரஜை அல்லாத ஒருவர் அரசியல் கட்சியொன்றை பதிவு செய்வதற்கு நாட்டின் சட்டத்தில் எந்த தடையுமில்லை என முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இலங்கை சட்டத்தின்படி இலங்கை பிரஜை இல்லாத ஒருவர் தேர்தலில் போட்டியிட முடியாது தேர்தலில் வாக்களிக்க முடியாது நாடாளுமன்ற உறுப்பினராக முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்புமனுக்களில் டயனா கமகே கையெழுத்திடவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.