பிரான்சு நுவசியல் நகரத்தில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு !

53 0

பிரான்சு நுவசியல் நகரத்தில் நேற்று 08.05.2024 புதன்கிழமை பிற்பகல் 14.30 மணி முதல் 17.00 மணிவரை முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் நுவசியல் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தினால் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.நுவசியெல் பிராங்கோ தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் மற்றும் இளையோர்கள் ஈகைச்சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தி அகவணக்கம் செலுத்தினர்.

தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் நினைவு சுமந்த பாடல்கள், நினைவுரைகள் என்பனவும் இடம்பெற்றிருந்தன.
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நினைவேந்தல் நிறைவடைந்தது.தொடர்ந்து பிரான்சின் ஏனைய நகரங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)