தெற்கு ஆசியா மற்றும் வங்காளவிரிகுடா வலய நாடுகளில் அதிகரிக்கும் சனப் பெருக்கத்தை இலக்காக கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற முதலீடுகளை திட்டமிடுவது ஜப்பானின் தனியார் தொழில் முயற்சியாளர்களின் பொறுப்பாகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
எதிர்வரும் 20 ஆண்டு காலப்பகுதியில் இந்த வலய நாடுகளின் சனத்தொகை 250 மில்லியன்களால் அதிகரிக்கும் என்று பிரதமர் கூறியுள்ளார்.
ஜப்பானின் சர்வதேச சந்தை அமைப்பின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மாநாடொன்றில் கலந்து கொண்ட பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.
இந்த மாநாட்டில் ஜப்பானின் 300 க்கும் அதிகமான முதல்தர வர்த்தகர்கள் கலந்து கொண்டிருந்ததாக பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.
“உலக சுற்றாடல் சம்பந்தமான இலங்கையின் வாசிப்பு மற்றும் ஜப்பானின் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் பிரதமர் இங்கு உரையாற்றியுள்ளார்.
வலயத்தின் பாதுகாப்பு மற்றும் அமைதிக்காக இலங்கை அர்ப்பணிப்புடன் செயலாற்றும் என்று பிரதமர் இங்கனு மேலும் கூறியுள்ளார்.

