ஹொரண கிரேஸ்லண்ட்வத்த துப்பாக்கிச்சூடு

9 0

ஹொரண கிரேஸ்லண்ட்வத்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிள்  ஹல்கொல வீதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர் .

இவ்விடத்தில் , வாகன அனுமதிப்பத்திரம் , காப்புறுதி சான்றிதழ், 03 பயன்படுத்தப்படாத ஜாக்கெட்,  2 தலைக்கவசம் ,  ஊதா நிற நீண்ட கை சட்டை, கறுப்பு நிற டெனிம் பேண்ட் மற்றும் சந்தேக நபர் அணிந்திருந்ததாக சந்தேகிக்கப்படும் முகமூடி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

நேற்று ஞாயியிற்றுக்கிழமை (05) ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேகநபர் ஹொரணை இரத்தினபுரி  பகுதியைச்  சேர்ந்த வர்த்தகர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்ற வேளை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது .