வெளிநாட்டு சொக்லேட்கள் மற்றும் பிஸ்கட்டுகளை விற்றவருக்கு கிடைத்த தண்டனை !

20 0

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சொக்லேட்கள் மற்றும் பிஸ்கட் என்பவற்றை விற்பனை செய்தவருக்கு ஒரு இலட்ச ரூபாய் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டை பொது சுகாதார பரிசோதகர்களான கு. பாலேந்திரகுமார் மற்றும் கி,அஜந்தன் ஆகியோர் ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி நிலையங்களில் திடீர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

அதன்போது முறையான விதத்தில் இறக்குமதி செய்யப்படாத மற்றும் நிறக்குறியீடு இல்லாத வெளிநாட்டு சொக்லேட் வகைகள் , பிஸ்கட்டுகள் மற்றும் இனிப்பு பண்டங்கள் என்பவற்றை மீட்டு இருந்தனர்.

அதனை அடுத்து உரிமையாளருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து , வழக்கு விசாரணைகளில் உரிமையாளர் குற்றங்களை ஏற்றுக்கொண்டதை அடுத்து , அவரை கடுமையாக எச்சரித்த மன்று ஒரு இலட்ச ரூபாய் தண்டம் அறவிட்டது.