கடத்தலுக்கு பயன்படுத்திய வேன் தொடர்பில் பொதுமக்களின் உதவியை கோரும் பொலிஸார்

14 0

கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி குளியாப்பிட்டிய வெரலுகம பகுதியில் நபரொருவரை கடத்திச் சென்ற சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வேனொன்று தொடர்பில் பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயது நபரொருவரே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

இந்த கடத்தல் சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் NW PK -0125 என்ற இலக்கத்தைக் கொண்ட சாம்பல் நிற வேன் ஒன்றின் படமொன்றை குளியாப்பிட்டிய பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

இந்த படத்தில் காணப்படும் வேன் தொடர்பில் தகவல் கிடைத்தால் கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

  • குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையம் – 071 859 1260
  • குளியாப்பிட்டிய பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் – 077 352 8325