உயர்நீதிமன்றத்திற்கு ஜனாதிபதி பிரதமநீதியரசரை தவிர நீதிபதிகளை நியமிப்பதற்கு இடைக்கால தடை

131 0

உயர்நீதிமன்றத்திற்கு பிரதமநீதியரசரை தவிர ஜனாதிபதி  நீதிபதிகளை நியமிக்க முடியாது என உயர்நீதிமன்றம் இன்று இடைக்கால தடையை விதித்துள்ளது.

சட்டத்தரணியொருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமைமனுவை ஆராய்ந்த பின்னரே உயர்நீதிமன்றம் இந்த இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

சட்டத்தரணி சரித் மஹீபுத்திர பத்திரத்ன இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.