7 கோடி ரூபா பெறுமதியான இரத்தினக் கற்களை விற்பனை செய்ய முயன்ற நால்வர் கைது

119 0

ஜா-எல  பகுதியில் ஏழு கோடி ரூபா பெறுமதியான ஐந்து இரத்தினக் கற்களை விற்பனை செய்ய முயன்ற நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .

கைது செய்யப்பட்டவர்கள் 28, 34 மற்றும் 40 வயதுடைய நிகவெரட்டிய, அட்டன், வெலிமடை மற்றும் தங்காலை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என ஜா-எல  பொலிஸார் தெரிவித்தனர் .

இந்த விடயம் தொடர்பில் ஜா – எல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.