பாசிக்குடா கடலில் காணாமல் போன நபர் சடலமாக மீட்பு!

180 0

கல்குடா – பாசிக்குடா கடலில் குளித்துக் கொண்டிருந்த நபர் இன்று திங்கட்கிழமை (29) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு நகரைச் சேர்ந்த குழுவினர் ஒன்று சேர்ந்து ஞாயிற்றுக்கிழமை (28) குளித்துக் கொண்டிருந்த போதே அதில் ஒருவர் காணாமல் போனார்.

இவ்வாறு காணாமல் போன நபரை கல்குடா டைவர்ஸ் அணியினர் நேற்று 3 மணிநேரம் தேடியும் அந்நபர் கிடைக்கவில்லை.

இந்நிலையில்,  இன்று தீவிர தேடுதலின் பின்னர் நீரில் மூழ்கிய நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கல்குடா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.