யுக்திய நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட இரு பஸ்கள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

140 0

யுக்திய நடவடிக்கையின் போது பெம்முல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவருக்கு சொந்தமான இரண்டு பஸ்களையும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான களுத்துறை டிப்போவிடம் ஒப்படைக்குமாறு கம்பஹா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பில் , களுத்துறை டிப்போவின் அதிகாரியொருவர் தெரிவிக்கையில், இலங்கை போக்குவரத்து சபையின் அறிவுறுத்தலுக்கமைய இந்த இரண்டு பஸ்களையும் பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.