அன்னை பூபதி அவர்களின் 36 ம் ஆண்டு நிகழ்வு – மில்டன்கிங்ஷ்-பிரித்தானியா.

43 0

அன்னை பூபதி அவர்களின் 36 ம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வும் நாட்டுப்பற்றாளர்கள் நிகழ்வும் இன்று மில்டன்ஷ் கிங் பகுதியில் இடம்பெற்றது.
நிகழ்வின் ஆரம்பமாக பொதுச்சுடர் ஏற்றலினை தமிழ் ஆர்வலரும் தமிழீழ உணர்வாளருமான ஆசிரியர் திருமதி பண்டித் ஜெயலக்‌ஷ்மி அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.
பிரித்தானிய தேசியக் கொடியினை சுந்தர லிங்கம் இந்திரகுமார் அவர்கள் ஏற்றிவைத்தார்கள். தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் வெளி மாநில பொறுப்பளர் திரு சிவா அவர்கள் தமிழீழ தேசியக்கொடுயினை ஏற்றிவைத்தார்கள்.

ஈகைச்சுடரினை சுப்ரமணியம் சிவரூபன் என்கின்ற இயற் பெயரைக் கொண்ட லெப்டன் ரகு மற்றும் சுப்ரமணியம் சிவகாந்தன் என்கின்ற இயற் பெயரைக் கொண்ட கப்டன் குகன் ஆகியோருடைய சகோதரர் சுப்ரமணியம் சிவகுமாரன் அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.
அகவணக்கத்தினை தொடர்ந்து அன்னைபூபதி அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலையினை நீண்டகாலமாக ஆசிரியராக பணியாற்றிவரும் திருமதி கலாதேவி சிவகுமார் மற்றும் ஆசிரியர் இராசநிலானி சிவானந்தம் அவர்கள் அணிவித்தார்கள் அதனை தொடர்ந்து மலர்வணக்கமும் சுடர்வணக்கமும் இடம்பெற்றது.
நிகழ்வில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு நியூற்றன் அவர்களின் உரை ,கவிதை மற்றும் எழுச்சி நடனங்கள் இடம்பெற்றன. நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலிவடிவில் ஒலிக்கப்பட்டு உறுதி மொழியோடு நிகழ்வானது நிறைவுற்றது.