அன்னை பூபதி அவர்களின் 36வது ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வும், நாட்டுப்பற்றாளர் தினமும் -யேர்மனி போகும்.

172 0

தியாகதீபம் அன்னை பூபதி அவர்களின் 36வது ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வும், நாட்டுப்பற்றாளர் தினமும் யேர்மனி போகும் நகரில் நினைவுகூரப்பட்டது.
இந்திய அமைதிப்படை விடுதலைப்புலிகளுடனான போரினை நிறுத்த வேண்டும், விடுதலைப்புலிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடாத்த வேண்டும் ஆகிய இரு கோரிக்கைகளை முன்வைத்து தென்தமிழீழம் மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் கோயிலின் முன்பாக 19.03.1988 தொடக்கம் 19.04.1988 வரை அகிம்சை வழியில் இந்திய இராணுவத்திற்கு எதிராக சாகும்வரை உண்ணா நோன்பிருந்து சாவைத் தழுவிக்கொண்ட தியாகதீபம் அன்னை பூபதி அவர்களின் 36வது ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வும், நாட்டுப்பற்றாளர்களினதும் நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வானது 27.04.2024 சனிக்கிழமை யேர்மனி போகும் நகரில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.

வணக்க நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து தியாகதீபம் அன்னை பூபதி அவர்களுக்கும், நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது. தொடர்ந்து மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன் மக்களால் சுடர், மலர்வணக்கம் செலுத்தப்பட்து. அகவணக்கத்துடன் வணக்க நிகழ்வுகள் ஆரம்பமாகின.
இவ்வணக்க நிகழ்வில் எழுச்சிப் பாடல்கள், இளையோர்களின் இன உணர்வுமிக்க எழுச்சி நடனங்கள், பேச்சு, நினைவுரை ஆகியன இடம்பெற்றன.
நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் பாடலைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடி கையேற்றலுடன் தமிழர்களின் தாரக மந்திரத்துடன் வணக்கநிகழ்வு எழுச்சியுடன் நிறைவுபெற்றது.