மாமனிதர் ஊடகவியலாளர் சிவராமின் 19ஆவது நினைவு தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு

12 0

ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் 19ஆவது ஆண்டு நினைவேந்தல் வவுனியா ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை (28) அனுஷ்டிக்கப்பட்டது.

அமையத்தின் செயலாளரும் ஊடகவியலாளருமான பரமேஸ்வரன் கார்த்தீபன் தலைமையில் இடம்பெற்ற இந்த நினைவேந்தலில் அன்னாரது திருவுருவப் படத்துக்கு மலர் தூவி, ஒளிதீபம் ஏற்றி, அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து, அவர் பற்றிய நினைவுப் பேருரையினை சிரேஷ்ட ஊடகவியலாளர் நடராசா ஜனகதீபன் ஆற்றினார்.

வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டு அமரர் சிவராமுக்கு அஞ்சலி செலுத்தினர்.