Miss Germany அழகிப்பட்டம் பெற்ற ஈரான் பெண்

14 0

அழகிப்போட்டி என்றாலே சிற்றிடையும் சிறுநடையும் கொண்ட அழகிய இளம்பெண்களுக்குத்தான் என்ற நிலைமை வேகமாக மாறிவருகிறது.

சமீபத்தில், 60 வயதான Alejandra Marisa Rodriguez என்னும் அர்ஜென்டினா நாட்டுப் பெண், Miss Universe Buenos Aires 2024 போட்டியில் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அதேபோல, ஜேர்மனியில், ஒரு குழந்தைக்குத் தயான, Apameh Schoenauer என்னும் 39 வயதுப் பெண்ணொருவர், Miss Germany அழகியாகத் தெர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஆறு வயதில் ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்த Apameh, ஈரானில் ஹிஜாப் அணியாததால் கொடூரமாகக் கொல்லப்பட்ட Mahsa Amini என்னும் இளம்பெண் குறித்து அறிந்ததைத் தொடர்ந்து, தானும் பெண்களுக்கு முன்னுதாரணமாக எதையாவது செய்யவேண்டும் என்று முடிவு செய்ததாக தெரிவிக்கிறார்.

அதன்படி, அழகிப்போட்டியில் கலந்துகொண்டதுடன், Miss Germany அழகியாகத் தெர்ந்தெடுக்கப்பட்டும் உள்ளார் Apameh.

இணையத்தில் சந்தித்துவரும் இனவெறுப்பு

ஜேர்மன் அழகியாகத் தெர்ந்தெடுக்கப்பட்டாலும், இணையத்தில் கடும் இனவெறுப்பைச் சந்தித்துவருகிறார் Apameh. காரணம், Apameh ஒரு ஈரானியப் பெண்.

Miss Germany அழகிப்பட்டம் பெற்ற ஈரான் பெண்: இணையத்தில் சந்தித்துவரும் இனவெறுப்பு | Miss Germany Is An Iranian Girl

ஆனால், தான் ஒரு ஈரானியப் பின்னணி கொண்ட பெண் என்பதால் தன்னை விமர்சிப்பவர்களைப் பொருத்தவரையில், அவர்களுக்கு தைரியமிருந்தால் நேரில் வரட்டும், அவர்களுடன் விவாதிக்க நான் தயார் என்கிறார் Apameh.

அப்படியில்லாமல், பெயரைக் கூட வெளிப்படையாகக் கூறாமல், தங்கள் திரைகளுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு என்னை விமர்சிப்பவர்களுக்காக பேசி நான் எனது சக்தியை வீணாக்கப்போவதில்லை என்கிறார் Apameh.