நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன்16 பெண்கள் 660 உட்பட பேர் கைது!

16 0

நாடளாவிய ரீதியில் நேற்று (25) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 16 பெண்கள் உட்பட  660 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில்  23 பேர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ள 3 பேரை புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 66 கிராம் ஹெரோயின், 232 கிராம் கஞ்சா ,  167கிராம் ஐஸ் ,  653 கிராம் கஞ்சா மற்றும் 20 கிராம் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.