கம்பளை – கல்பாய பிரதேசத்தில் இயங்கிவந்த தேயிலைத் தொழிற்சாலை ஒன்றிலிருந்து மனித பாவனைக்கு உதவாத 20 ஆயிரம் கிலோ கிராமிற்கும் அதிகமான தேயிலைகளை இன்று (25) பகல் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் தொழிற்சாலையின் முகாமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பளை பிராந்தியத்திற்கு பொறுப்பான விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல்வேறு பிரதேசங்களிலிருந்து மலையக பகுதிக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்படும் மனித பாவனைக்கு உதவாத தேயிலைகளில் இரசாயன திரவியங்களை கலந்து நிறம் மாற்றி நல்ல தேயிலைகளுடன் கலந்து உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்துவருவது விசாரணைகளிலிருந்துதெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர் மேலதிக விசாரணைகளுக்காக கைப்பற்றப்பட்ட தேயிலைகளுடன் இலங்கை தேயிலைச் சபையின் கம்பளை கிளை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

